Categories
இதழிலிருந்து மகளிர்

மகளிர்தின ஸ்பெஷல்: இருளும் ஒளியும்

இனி பார்வைக்கே வாய்ப்பில்லை, இருப்பதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டேதான் போகும் என்ற நிலையில், ஒரு மனைவியாய், தாயாய், புகுந்த இடத்தில் தன் இருப்பைப் பெருமையோடு முன்வைக்க விரும்பிய அவருக்குப் பேரதிர்ச்சி. எண்ணற்ற கனவுகளும் கற்பனைகளும் கொண்டிருந்த தனது வண்ண உலகம் வசீகரமிழந்துவிடப்போகிறது என்ற உண்மைக்கு முகம் கொடுக்க நேர்கிற ஒரு பெண்ணின் மனநிலையை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட இயலாது.