சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டிஇஎல்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், அவர் உடல்நலிவுற்றமை குறித்தும், அவருக்கு உதவிகள் செய்திட முன்வருமாறும் சவால்முரசு வலைதளத்தில் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். தொடர்ச்சியாக அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலில் எதுவும் கைகூடாமல் போனது வருத்தமாய் இருக்கிறது. எனினும், பதிவினைப் படித்த்உவிட்டு, பள்ளியின் முன்னால் ஆசிரியர்களான மறைந்த திரு. போஸ் மற்றும் மறைந்த […]
Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற முறை பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என நமது சவால்முரசு தளத்தில் தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது இந்த இரண்டு இணையதளங்களிலும் capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவும் […]
தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
ஒரு முக்கியப் பின்னூட்டம்
ரொம்ப நன்றி சார். காலச்சூழலுக்கு உகந்த பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற காலகட்டங்களுக்கு தயாரிக்கக்கூடிய வளைதளங்களாக இருக்கட்டும், அல்லது நிரந்தரமாகக் குறிப்பிட்ட அலுவல் சார்ந்த வலைதளங்களாக இருக்கட்டும் இவைகளை அரசாங்கம் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து அதைச் செய்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாமும் இருக்கிறோம். கட்டுரையில் நீங்கள் சொல்லியிருக்கிற accessibility tester பணிக்கான நபரை நிறுவனம் நியமிக்காமல் அரசே நியமிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கும் […]
ஒரு இணையதளம் அதிலும் அரசின் சார்பில் பொது மக்களின் அவசியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படும் இணையதளம் என்பது, அனைவரும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் எளிதாக அணுகும்படியாக (easy to access) வடிவமைக்கப்படுவது கட்டாயம்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.
அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது.
