ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.

இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.
புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.