மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீஹாரில் ஊனமுற்றோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா? கல்வியறிவு பெற்ற ஊனமுற்றவர்கள் எத்தனைபேர்?
மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் பொதுப் பிரிவில் வாய்ப்பு வழங்காமல், இட ஒதுக்கீடு இடங்களைப் பெறுவதற்கு மட்டுமே வலியுறுத்துகின்றனர். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு மற்றும் அவர்களது சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெறுவதில்லை. மாறாக மாற்றுத்திறனாளிகள் அவர்களின் ஊனத்தின் பெயரால் மட்டுமே ஒதுக்கீடு பெறுகின்றனர்
அன்புத் தோழமைகளே! உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னுடைய இந்த எளிமையான கேள்வியை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தோழமைகளிடம் முன்வைக்கிறேன்.
சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.
“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப் படைப்புகளுக்கான பெஞ்ச் மார்க் என்று குறிப்பிடுவதற்கு மாற்றே இல்லாத ஒரு படைப்பு ஸ்பர்ஷ் என்று உறுதிபடக் கூறலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படமே இன்றைக்கும் பெஞ்ச் மார்க் நிலையில் இருக்கிறதென்றால், இவ்வளவு காலமாக படைப்பாக்கத்தில் நாம் தேங்கிவிட்டோம் என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.
பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன்.
ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.
1. சிறப்பை நோக்கிய செயல்கள்
2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.