உலக பிரெயில் நாள் ஐக்கிய நாடுகள் பொது அவை – 2019 ஜனவரி 04 லூயி பிறந்த தினம் உலக பிரெயில் நாளாகக் கடைபிடிக்கப்படும்’ என கடந்த டிசம்பர் 17, 2018 அன்று நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இதை வரவேற்றுள்ள உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union) இதன்மூலம் தங்களது நீண்டநாள் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பால் பிரெயில் முறையை வளர்த்தெடுப்பதில் உலகநாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது. […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
கடந்த ஜூலை மாதத்தின் ஒருநாள், காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்குக் கிளம்பினேன். வழக்கம்போல 75 விழுக்காடு பயணச்சலுகைக்காக என் அடையாள அட்டை நகலை பயணச்சீட்டு தருபவரிடம் நீட்டினேன். நான் ஏறிய பேருந்து நடத்துநர் இல்லாத பேருந்தாம். எனவே முதலில் நேரமில்லை என்ற காரணத்தைச் சொன்ன பயணச்சீட்டு தருபவர், கொஞ்ச நேரத்திலேயே “இந்த பஸ்ல இதெல்லாம் செல்லாது” என்று சொல்லிவிட்டார். அவர் சொன்ன அந்த வாக்குமூலத்தை அப்படியே எனது அடையாள அட்டை நகலில் எழுதித் […]
கலைஞர் நினைவிடத்தில் விரல்மொழியர்
பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் மின்னிதழான விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழ், கலைஞரின் நினைவிடத்தில் வைத்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது. ஆர்வமுள்ள ஆறு பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் இணைந்து, பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கில் துவங்கப்பட்டதுதான் மாதாந்திர மின்னிதழான விரல்மொழியர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் அவர்களின் மறைவை ஒட்டி, தங்களது ஆகஸ்ட் மாத மின்னிதழை கலைஞர் சிறப்பிதழாக வெளியிட்டனர். கலைஞர் சிறப்பிதழ் இணையத்தில் மட்டுமே பலராலும் படிக்கப்பட்ட கலைஞர் சிறப்பிதழை கடந்த டிசம்பர் […]
வழிகாட்டல் பயிலரங்கு: – ஆணையர் அனுமதி
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2018 19 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு நடத்திட அனுமதித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார். பார்வையற்றோருக்கான முறையான கல்வியை மேம்படுத்தல் என்கிற உயரிய நோக்கத்தை முதன்மையானதாகக்கொண்டு செயல்படும் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் ஆக்கபூர்வ முயற்சிகளில் ஒன்று, அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான எதிர்கால கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு. கடந்த […]
