நன்றி விகடன்.com: மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று நிதி உதவி! – நெகிழ வைக்கும் நலச் சங்கத்தின் முயற்சி தமிழகத்தின் பல மாவட்டங்களில் வருமானமின்றி தவித்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கின் விவரத்தை எங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலம் பெற்று அவர்கள் உண்மையான மாற்றுத்திறனாளிகள்தானா என்பதை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வீதம் அனுப்பி வைத்தோம். கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்காக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
Anne Sullivan Macy படக்காப்புரிமை afb.org அது கடந்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் மாதத்தின் ஏதோ ஒருநாள். பரபரப்பான பள்ளி சேர்க்கை என்றெல்லாம் பொய்சொல்ல மாட்டேன். சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கையைப் பொருத்தவரை, மாதத்திற்கு ஒரு குழந்தை வந்தாலே அதிகம். அப்படித்தான் ஒரு தாய் தன் குழந்தையைத் தோளில் போட்டபடி எமது பள்ளிக்கு வந்தார். குழந்தையின் பெயர் தமயந்தி. விசாரித்ததில் தாயின் நிலைமைக்குத்தான் அந்தப் பெயர் மிகவும் பொருத்தம் என்று தோன்றியது. குழந்தைக்குக் காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. […]
கரோனா பேரிடர் காலத்தில், மாற்றுத்திறனாளிகள் பல புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால், வேறு எவரையும்விட அவர்களுக்கு அதிக கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. அவர்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்கக்கூடும், தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை சரியாக அறிந்துகொள்ள இயலாதபோது, அவர்கள் மன அழுத்தத்தோடு காணப்படுவார்கள். எனவே, அரசும் அவர்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை அவர்களுக்கு உரிய வடிவத்தில் (accessible format) கொண்டுசேர்க்க வேண்டும் என ஹைதராபாத்திலுள்ள இந்திய பொதுசுகாதார […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் கரோனா ஊரடங்கு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவும் பொருட்டு இலவச அழைப்புமையம் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவுவரை 15328 அழைப்புகள் வந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய துறை அதிகாரிகள், “அர்ப்பணிப்பு மிக்க 42 நபர்களைக்கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெறப்படும் அழைப்புகள் உரிய வடிவில் மாற்றப்பட்டு, தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன” என்றனர். […]
கல்லுப்பட்டி முதல் கலிஃபோர்னியா வரை, “அன்புத் தோழமைகளே!” என்கிற எங்களின் ஒற்றை மன்றாட்டிற்குச் செவிசாய்த்து, பார்வையற்றோர் சமூகத்தின் துயர்துடைக்க நீண்டுகொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான கரங்களை மானசீகமாய்ப் பற்றிக்கொள்கிறோம். உறுதிச் சான்று கேட்பதில்லை, உளச்சான்றே சாட்சி, எவ்விதப் புகைப்படமும் இல்லை, அன்பின் மன வரைபடம் கொண்டு தேடித் தெரிவு செய்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை களப்பணி ஏதுமின்றி தொழில்நுட்ப உதவியுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து வருகிறோம். கனத்த மனதைத் தந்துவிட்டுப் போகிற சில […]
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென ப்ரத்யேக 24 மணிநேர தொலைப்பேசி உதவி எண்களை அமல்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் கொண்டு செய்கை மொழியில் உரையாடலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் கொரோனா தொற்று நோய் பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய உதவிகள் தேவையெனில் இந்த […]
படக்காப்புரிமை ஆனந்தவிகடன் ஆ. நவயுகன்இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.பிரீமியம் ஸ்டோரிஉலகின் ஆகச்சிறந்த உணர்வு தாய்மைதான். பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாய்மையால் அவர்களை நேசிக்க முடியும். தாய்மை உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமும் கிடையாது.இதைத் தன் பாசத்தால் நிரூபித்துவருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. சர்வதேச மகளிர் தினத்தன்று பெங்களூரில் ‘wEmpower ‘ என்ற நிகழ்வில் ‘உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் ஆதித்யா. இந்த நிகழ்வை நடத்தியது […]
படக்காப்புரிமை ஆனந்தவிகடன் ஆ. நவயுகன்இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.பிரீமியம் ஸ்டோரிஉலகின் ஆகச்சிறந்த உணர்வு தாய்மைதான். பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாய்மையால் அவர்களை நேசிக்க முடியும். தாய்மை உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமும் கிடையாது.இதைத் தன் பாசத்தால் நிரூபித்துவருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. சர்வதேச மகளிர் தினத்தன்று பெங்களூரில் ‘wEmpower ‘ என்ற நிகழ்வில் ‘உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் ஆதித்யா. இந்த நிகழ்வை நடத்தியது […]
படக்காப்புரிமை minnambalam.com கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று அறிவித்த மத்திய அரசின் சிறப்பு நிவாரண தொகுப்பு.. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பெருத்த ஏமாற்றம்! ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை(NPRD) அறிக்கை!மத்திய நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கு சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே சிறப்பு உதவி நிதி, அதுவும் 2 தவணைகளாக வங்கிகளில் நேரடியாக செலுத்தும் முறையில் தருவதாக அறிவித்துள்ளார். இது மாதம் ஒன்றுக்கு சராசரியாக மாதம் ரூ.333.33 மட்டுமே […]
கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 24.03.2020 முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், பார்வை மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களான இரயில் மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், பொதுமக்களால் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பிறரின் உதவியைப்பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் […]
