நன்றி ஆனந்தவிகடன் இருவர் மட்டுமே வசிக்கும் அந்த வீடு அன்பாலும் காதலாலும் நிறைந்திருக்கிறது. பார்வைத்திறன் இல்லாத மகேந்திரனும் ஷோபனாவும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் எல்லா வலிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், இன்று மதிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர். மகேந்திரன் உதவிப் பேராசிரியராகவும், ஷோபனா அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்களை இணைத்ததுடன், இவர்களின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது காதல்! “பிறந்தபோதே பார்வைத்திறன் குறைபாடு இருந்துச்சு. அஞ்சாவது படிக்கிறப்போ சுத்தமா பார்வை தெரியலை. ‘இனிமேல் குணப்படுத்த முடியாது’ன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. ஆறாவதுல இருந்து பூந்தமல்லி […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
12 மே 2020 அன்று, மாலை 3.30 மணிக்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பெண்கள் என்ற தலைப்பின்கீழ் நெறியாளர் சகிதம் நான்கு பெண்கள் எழுபது பங்கேற்பாளர்களோடு மேற்கொண்ட இணக்கமான உரையாடலில், இதுவரை சிந்திக்காத புதிய கோணங்களும், பல எளிய புரிதல்களும் இதயத்தைக் கிளறின. வெண்ணிலா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டுவரும் வெண்ணிலா அவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் பார்வையற்ற […]
நேற்று, மே 12 ஆம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் என்ன […]
நன்றி மின்னம்பலம்சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70 வயது தங்கப்பனிடம் காலையில் பேசியபடியே தனது நாளை துவங்குவது வழக்கம். அதுபோல ஞாயிற்றுகிழமை அவர் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தங்கப்பன் ஏற்கனவே இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.அந்த பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு காலை உணவு வழங்க வந்தபோது, தங்கப்பன் இறந்தது அவர்களுக்கு தெரியவர பார்வையற்ற […]
12 மே 2020, செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு! கருத்தரங்கில் பங்கேற்பதற்கான ஜூம் இணைப்பு Meeting ID: 840 1586 3576 கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற […]
கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் […]
படக்காப்புரிமை newzhook.com கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ரிஷிகேஷிலுள்ள இந்திய அறிவியல் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் திரு. ரவிகாந்த் அவர்கள், முன்யோசனையற்ற, மிகவும் பிற்போக்குத்தனமான, முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அந்தச்சுற்றறிக்கையில், உடல் ஊனம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு காரணமாக, தங்களின் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு நடுவண் அரசின் குடிமைப்பணிகள் நடத்தை விதிகளின்படி, (CCS Rules) கட்டாய பணி ஓய்வு வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட சுற்றறிக்கையினைத் திரும்பப்பெற […]
நன்றி விகடன்.com: ஓட்டெடுப்பு முதல் உளவியல் ஆலோசனை வரை… விழிச்சவால் கொண்டவர்களுக்காக இயங்கும் டெலிகிராம் குரூப்!“குழுவிலுள்ள பலரும் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தார்கள். குழுவில் இல்லாத ஒருசிலரும் உதவினார்கள். மொத்தம் 77,000 ரூபாய் கிடைத்தது. சிறியதுதான் என்றாலும், எங்களின் நிலைக்கு இந்தத் தொகை பெரியது”விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இயங்கிவருகின்றன இரண்டு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள். இவற்றில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் இருப்போர் முதல் சாமானியர்கள் வரை பலரும் உறுப்பினர்கள். பார்வையற்றவர்களின் […]
‘பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!’ என்ற தலைப்பின்கீழ், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவையால் இணையவழிக் கருத்தரங்கு இன்று (19, ஏப்ரல்) ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஐம்பது நபர்கள் ஜூம் வழியாக இணைந்து, இறுதிவரை உற்சாகம் குன்றாது கலந்துரையாடல் நிகழ்த்தினர். இந்தக் கருத்தரங்கில், தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேர்க்கொண்டுவரும் பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ருதி வெங்கடாசலம் பங்கேற்று, பன்னாட்டுச் […]
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் முதல் மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் – ஏப்ரல்-2020! பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்! 19 ஏப்ரல் 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை. நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் […]
