7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
31 ஜூலை, 2020 ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள் கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு, மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். தெளுங்கானா உயர்நீதிமன்றமோ, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக […]
4 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு […]
ஜூலை 31, 2020 கௌதமி வணக்கம் என் பெயர் கௌதமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம். எனக்குப் பிறந்ததிலிருந்தே பார்வையில பிரச்சனை இருந்துச்சு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால ஒரு ஆப்பிரேஷன் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் இருந்த கொஞ்சப் பார்வையும் போயிடுச்சு. படிப்பும் அதிகம் இல்லை சேலம் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளியில எட்டாவதுவரைக்கும்தான் படிச்சேன். இப்போ எனக்கு 25 வயசாகுது. மேலும் படிச்சு நல்ல ஒரு அரசு வேலைக்குப் போகனும்கிறதுதான் என் எண்ணம். அதனால பத்தாவது பரிட்சைக்குப் ப்ரிப்பேர் […]
30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]
30 ஜூன், 2020 அருணாச்சலம் இந்திய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், பார்வையற்றோருக்கான நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து களப்பணியாற்றிய முன்னோடியுமான திரு. அருணாச்சலம் அவர்கள், கரோனா தொற்றுக்குள்ளாகி, இன்று பகல் 11 மணி அளவில் உயிரிழந்தார். அறுபது வயதைக் கடந்த திரு. அருணாச்சலம், தன் மனைவி கீதா மற்றும் மகன் மணிகண்டனோடு சென்னை அடையாறில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்றின் காரணமாக மூவருமே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அவர் […]
30 ஜூன், 2020 முதலும் இடையும் சேர்ந்து கடை திறந்தன; கடை வளர வளர, முதல் பெருகப் பெருக, இடை காணாமலே போனது. தன்னார்வ, தொண்டு, நிறுவனம். *** அந்தப் பார்வையற்ற பெண்ண்உக்கு அரசு வேலை கிடைத்ததும் வரன் பார்க்கும் படலம் தொடங்கினார்கள் பெற்றோர் அவள் தங்கைக்கு. *** அரசு வேலை கிடைத்ததும் அந்தப் பார்வையற்றவன் வைத்துக்கொண்டான் சாட்டுக்கு ஸ்மார்ட் ஃபோன், பாட்டுக்கு பெரிய பெரிய ஸ்பீக்கர், நியூசுக்கு ஒரு பெரிய திரை எல்ஈடி; அவர்களும் வைத்துக்கொண்டார்கள் […]
செய்தி உலா
30 ஜூன், 2020 ஷேகர் நாயக் இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஷேகர் நாயக்கிற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உதவ முன்வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஷேகர் நாயக் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வென்றவர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் கரோனா ஊரடங்கால் தன் வேலயை இழக்க நேர்ந்தது. இந்நிலையில், தனது மனைவியின் நகைகளை வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்த்இருக்கிறார். ஷேகர் […]
30 ஜூன், 2020 கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு […]
27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை […]
