8 ஆகஸ்ட், 2020 மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்: அன்புடையீர் வணக்கம்! மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள். இடம்: ஜூம் அரங்கம். நாள்: இன்று ஆகஸ்ட் 8 2020 சனிக்கிழமை. நேரம்: காலை 11 மணி. Meeting link: https://us02web.zoom.us/j/89178030732 Meeting ID: 891 7803 0732 […]
Author: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
புதுப்பாய்ச்சல்
6 ஆகஸ்ட், 2020மாற்றுத்திறனாளிகள் வரலாற்றில் அவர்களால் அவர்களுக்காகப் படைக்கப்பட்ட முதல் கிண்டில் மின்னிதழ் சவால்முரசு. இன்று (6.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.30 முதல், நாளை (7.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.29 வரை இலவசம், இலவசம், முற்றிலும் இலவசம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கிப் படியுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுச்சமூகத்திற்கும் இடையேயான உரையாடல் தொடங்கட்டும். உலகெல்லாம் பரவட்டும். சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம். சவால்முரசு மின்னிதழ்: ஜூன் மற்றும் ஜூலை 2020 இதழ்கள் (Tamil Edition) இதழைப் பதிவிறக்க, […]
05 ஆகஸ்ட், 2020 மரபணு ஆலோசனை என்றால் என்ன? மரபுவழி தோன்றும் பார்வை குறைபாட்டினை தடுக்க இயலுமா? எவ்வகை உறவுமுறை திருமணங்கள் பார்வை பாதிப்பை ஏற்படுத்துகின்றன? பார்வை குறைபாடு உடையவர்களும், உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களும் மேற்கொள்ளவேண்டிய மரபணு பரிசோதனைகள் எவை? பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் இதர காரணிகள் எவை? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வாருங்கள் ஜூம் அரங்கிற்கு. அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) மரபணு […]
31 ஜூலை, 2020 பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் […]
31 ஜூலை, 2020 இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா கடந்த 2012 ஆம்ஆண்டு, வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 – 2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, […]
31 ஜூலை, 2020 P.K. பின்ச்சா ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காலை, டில்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார் ஊனமுற்றோருக்கான நடுவண் மேனாள் தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabled) திரு. பிரசன்னக்குமார் பின்ச்சா அவர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த இந்திய ஊனமுற்றோர் சமூகமும் துடித்துப்போனது. சமூகவலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்திகள் பகிரப்பட்டதோடு, ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராக அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நினைவுகூரப்பட்டன. முருகானந்தம் […]
நிகழ்வு 1:தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வீட்டருகே வறுமையால் தாய், மாற்றுத்திறனாளி மகன் இருவர் தற்கொலை சம்பவம்! மாற்றுத்திறனாளிகள்உரிமைக்குரல் முகநூல் பக்கத்தில் குடும்பத்தினருடன் நேரடி விவாதம்! இன்று ஆகஸ்ட் 1, சனிக்கிழமை காலை 11 மணிக்கு. செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் காண சைகை மொழியும் உண்டு! நிகழ்வு 2:கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்நாள் : 01.08.2020 சனிக் கிழமை.நேரம் : மாலை 05.45 மணி.ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு […]
31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]
27 ஜூலை, 2020 P.K. பின்ச்சா P.K. பின்ச்சா (Pincha) என்றழைக்கப்படும் பிரசன்னக்குமார் பின்ச்சா ஒரு பார்வையற்றவராக இருந்தபோதிலும், பல்வேறு நடைமுறை மற்றும் மனவியல் சிக்கல்களையும் கடந்து, தனது கல்வியாலும், திட மனப்பான்மையாலும் அதிகார உச்ச பீடத்தை எட்டிப்பிடித்தவர். அத்தோடு தனது செயல்பாடுகளை அவர் நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தால், இன்று அவருக்காக இந்திய பார்வையற்றோர் மற்றும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை அரசுக்கு ஒப்படைக்கும்வரை அதன் […]
24 ஜூலை, 2020 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) இணைய வெளி கருத்தரங்கம் குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா? பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள 24.07.2020 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால் “திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை […]
