Categories
banking editorial

கருணை வேண்டாம், கடமை போதும்

31 ஆகஸ்ட் 2020 சவால்முரசு லோகோபார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் உட்பட வங்கியின் அனைத்து வசதிகளும் எந்தவித மறுப்புமின்றி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2008 ஆம் ஆண்டே, ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும், பார்வையற்றவர்களுக்கு வங்கிகள் ஏடிஎம் தர மறுப்பதாக தினமும் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  சுற்றறிக்கை வெளியிடப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பல வங்கிகளில் வாடிக்கையாளருக்கும் […]

Categories
disabled news

செய்தி உலா

31 ஆகஸ்ட், 2020 வரலட்சுமி, சுரேஷ்    நாயகி வரலட்சுமி காவல்த்துறை அதிகாரியாக நடித்து இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் நெட் ஃப்லிக்ஸில் வெளியான திரைப்படம் டேனி.  பள்ளியில் படிக்கும் ஒரு பார்வையற்ற குழந்தையின் இறப்பு குறித்த புலனாய்வே படத்தின் மூலக்கதை என்பதால், இந்தப் படத்தின் பல காட்சிகள் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படமாக்கப்பட்டன. படத்தில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஸ்குமார் மற்றும் இரவுக்காவலர் ராஜ்குமார் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்கள். டைட்டில் கார்டிலும் […]

Categories
inclusive education new education policy

கல்விக்கொள்கைகளும் காவுகொடுக்கப்படும் அடிப்படை விழுமியங்களும்

31 ஆகஸ்ட், 2020 மாற்றுத்திறனாளியின் புகைப்படம்மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 போலவே, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பாகவும் தனித்த ஒரு சட்டம் வேண்டும் என கடந்த ஆண்டு புதிய தேசியக் கல்விக்கொள்கை வரைவு மீதான கருத்துக்கேட்பில் தங்கள் எண்ணங்களை வெளியிட்டிருந்தன பல மாற்றுத்திறனாளி சங்கங்கள். அவர்கள் குறிப்பிட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பெயரை ஓரிருமுறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பில், வேறு எந்த ஆக்கபூர்வ நடவடிக்கைக்கும் நடுவண் அரசு தயாராக இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறது தற்போது […]

Categories
balanagendiran civil service interviews upsc

வீரியமான ஆசை, வெறித்தனமான தேடல்

31 ஆகஸ்ட், 2020 பாலநாகேந்திரன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய வருவாய்த்துறையில் பணி ஒதுக்கப்பெற்றவர். எப்படியாயினும் இந்திய ஆட்சிப்பணியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். கேள்வி எதுவானாலும் தேர்ந்தெடுத்த சொற்களோடு சுவையான சுவாரசியமான, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய பதில்களைத்தரும் திரு. பாலநாகேந்திரனைச் சந்தித்தோம். தீர்க்கமான வரையறைகளோடு அவர் தெறிக்கவிட்ட பதில்கள் இங்கே. […]

Categories
நம்பிக்கை குரல் civil service interviews poorana sundari

பூரண வெற்றி

31 ஆகஸ்ட், 2020 இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றுதான். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து நான்குமுறை முயற்சித்து, இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகள் தேர்வுகளில் 286 ஆவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார். முடிவுகள் வெளியிடப்பட்ட 11ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்தது இவரின் பேட்டி. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என […]

Categories
corona kalaignar news relief pension

‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு

14 [செப்டம்பர், 2020          கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும்        அவர்களுக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா ஊரடங்கு, நான்கைந்து கட்டங்களைக் கடந்து, இப்போதும் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. பெரும்பாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள இந்தக் கட்டத்திலும்கூட ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், ரயில் வணிகம் செய்து வாழும் பெரும்பாலான பார்வையற்றோர் குடும்பங்கள் இன்னமும் துன்பத்தில் […]

Categories
corona assistance corona schemes zoom conference

“பேருந்து நிலையங்களில் பெட்டிக்கடைகள், மாவட்டந்ந்தோறும் தொழில்ப்பயிற்சி மையங்கள்” கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?

31 ஆகஸ்ட், 2020 கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தனி மனித இடைவெளி, தொடுதலைத் தவிர்த்தல் போன்றவை புதிய இயல்பு (new normal) வாழ்வியல் முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன. தொட்டுத் தடவிப் பார்த்தல், கையைப் பற்றி நடந்து செல்வது போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நெருக்கடியான சூழ்நிலையில் சுய தொழில் நடத்திவரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள, இந்தப் புதிய வாழ்வியல் முறைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள மற்றும் […]

Categories
corona corona assistance livelihood zoom conference

முக்கிய முன்னெடுப்பாய் அமைந்த முதல் கருத்தரங்கு

31 ஆகஸ்ட், 2020 “நமக்கான பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சொல்லும்  ஒருவரி கமெண்ட். “என்ன செய்யலாம்? உங்க பிரச்சனையைச் சொல்ல கமிஷ்னரைக் கூப்பிடுவோமா?” என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மணிக்கண்ணன் கொழுத்திப்பொட, பற்றிக்கொண்டது ஆக்கபூர்வ அக்கினி; நிகழ்ந்தேறியது ‘கரோனா காலத்திற்குப் பின் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’ என்ற […]

Categories
achievers differently abled education helenkeller association seminar

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்

9 செப்டம்பர், 2020 தொடக்க நாள்: செப்டம்பர் 9: நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை. அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே! பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் […]

Categories
crime differently abled commissioner differently abled news sivakumar

“வீடு கட்டினால் வெட்டுவேன்!” மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்?

8 செப்டம்பர், 2020 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் ம. சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473)  இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே […]