Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு

பணிநிரவல் நடவடிக்கையிலிருந்து அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் விலக்கு: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியீடு

கடந்தமாதம் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில் பார்வையற்ற ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநிரவலிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் உபரி ஆசிரியர் பணிநிரவலிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்தமாதம் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில் பார்வையற்ற ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநிரவலிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பணிநிரவலிலிருந்து அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் விலக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உடனடித் தீர்வைப்பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் (டாராடாக்) அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களால் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பணிநிரவல் கலந்தாய்விலிருந்து அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் விலக்கு வழங்கப்படுவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையைத் தரவிறக்க


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.