ஊனமுற்றோரைப் பொறுத்தவரை, ஒரே வகை ஊனமுற்றோர் மற்றும் சார் வகை ஊனமுற்றோர் என இரு வகையிலான இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
Month: Sep 2020
அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.
1. சிறப்பை நோக்கிய செயல்கள்
2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.
பார்வையற்றவர் நாம் இத்தனை தூரம் வந்துவிட்டோம் என்பதை வங்கித் தேர்வாணையத்திடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் தேர்வினைத் தாங்களே எழுத விரும்புபவர்கள் கணினியில் எழுதலாம், மற்றவர்களுக்கு பதிலி எழுத்தர் வசதி வழங்கப்படும் என்ற தெரிவு வசதியை முதலில் அறிமுகப்படுத்துமாறு நாம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
29 செப்டம்பர், 2020 முத்துசாமி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை சரியாக ஒரு மணியளவில் அன்னார் இயற்கை எய்தியதாக வந்த தகவலை அடுத்து, பார்வையற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு இதயத் துடிப்பு இருப்பதாகவும், ட்ரிப்ஸ் ஏற்றும் அளவிற்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நேர்மறையான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
20 செப்டம்பர், 2020 ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்: (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்) பங்கேற்றுப் பயன்பெற தொடர்புகொள்ளுங்கள், 9655013030 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
31 ஆகஸ்ட் 2020 சவால்முரசு லோகோபார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் உட்பட வங்கியின் அனைத்து வசதிகளும் எந்தவித மறுப்புமின்றி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2008 ஆம் ஆண்டே, ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும், பார்வையற்றவர்களுக்கு வங்கிகள் ஏடிஎம் தர மறுப்பதாக தினமும் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பல வங்கிகளில் வாடிக்கையாளருக்கும் […]
செய்தி உலா
31 ஆகஸ்ட், 2020 வரலட்சுமி, சுரேஷ் நாயகி வரலட்சுமி காவல்த்துறை அதிகாரியாக நடித்து இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் நெட் ஃப்லிக்ஸில் வெளியான திரைப்படம் டேனி. பள்ளியில் படிக்கும் ஒரு பார்வையற்ற குழந்தையின் இறப்பு குறித்த புலனாய்வே படத்தின் மூலக்கதை என்பதால், இந்தப் படத்தின் பல காட்சிகள் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படமாக்கப்பட்டன. படத்தில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஸ்குமார் மற்றும் இரவுக்காவலர் ராஜ்குமார் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்கள். டைட்டில் கார்டிலும் […]
31 ஆகஸ்ட், 2020 மாற்றுத்திறனாளியின் புகைப்படம்மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 போலவே, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பாகவும் தனித்த ஒரு சட்டம் வேண்டும் என கடந்த ஆண்டு புதிய தேசியக் கல்விக்கொள்கை வரைவு மீதான கருத்துக்கேட்பில் தங்கள் எண்ணங்களை வெளியிட்டிருந்தன பல மாற்றுத்திறனாளி சங்கங்கள். அவர்கள் குறிப்பிட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பெயரை ஓரிருமுறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பில், வேறு எந்த ஆக்கபூர்வ நடவடிக்கைக்கும் நடுவண் அரசு தயாராக இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறது தற்போது […]
31 ஆகஸ்ட், 2020 பாலநாகேந்திரன் தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய வருவாய்த்துறையில் பணி ஒதுக்கப்பெற்றவர். எப்படியாயினும் இந்திய ஆட்சிப்பணியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். கேள்வி எதுவானாலும் தேர்ந்தெடுத்த சொற்களோடு சுவையான சுவாரசியமான, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய பதில்களைத்தரும் திரு. பாலநாகேந்திரனைச் சந்தித்தோம். தீர்க்கமான வரையறைகளோடு அவர் தெறிக்கவிட்ட பதில்கள் இங்கே. […]
31 ஆகஸ்ட், 2020 இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றுதான். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து நான்குமுறை முயற்சித்து, இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகள் தேர்வுகளில் 286 ஆவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார். முடிவுகள் வெளியிடப்பட்ட 11ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்தது இவரின் பேட்டி. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என […]
