Categories
important programs seminar

நிகழ்வு: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் மே_2020! கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? சமூக,, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்ற பெண்கள்

12 மே 2020, செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு!

Meeting ID: 840 1586 3576
graphic zoom
கருத்தரங்கில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,
உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 

கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் 
விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் 
செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற இடத்தில் உங்களின் பெயரைக் கொடுத்துவிடவும்.
மாலை 3.30 மணிக்கு மீட்டிங் தொடங்கவிருப்பதால், அதற்கு 10 நிமிடங்களுக்குமுன்பாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி, அதில் ஓப்பன் வித் ஜூம் கொடுத்தோ, அல்லது மேலே வழங்கப்பட்டுள்ள மீட்டிங் ஐடியை உள்ளிட்டோ நீங்கள் நேரடியாக மீட்டிங்கிற்குள் சென்றுவிடலாம்.
பாஸ்வேட் தேவை இருக்காது. பெயர் என்ற இடத்தில் உங்கள் கணினி அல்லது திறன் பேசியின் பெயர் இருந்தால், அதனை எடிட் செய்து உங்கள் பெயரை வழங்குவது, மீட்டிங்கை ஒருங்கிணைப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. ஊனமுற்றோர் உரிமைகள் குறித்தும் பிற முற்போக்கு கருத்தியல்கள் குறித்தும் மாதந்தோறும் இணையவழியில் கருத்தரங்குகளை பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை நடத்தி வருகிறது.
அவ்வகையில் எமது பேரவையின் இரண்டாவது மாதாந்திர  இணைய வழிக் கருத்தரங்கம் 12 மே 2020 (எதிர்வரும் செவ்வாய் கிழமை) பிற்பகல் 3.30 முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
சமூக,, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்ற பெண்கள்” என்ற பொருண்மையில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கம் பார்வையற்ற பெண்களின் வாழ்வியல் சவால்கள், தனித்துவமான சிக்கல்கள், பாலின சமத்துவத்திற்கான தடைகள் போன்றவற்றை விவாதிக்கிறது.
பொதுவாகவே பெண்ணிய இயக்கங்களும் செயல்பாட்டாளர்களும் குறைய்ந்த அளவே பார்வையற்ற அல்லது ஊனமுற்ற பெண்களின் உரிமைகளைப் பேசத் தொடங்கியுள்ளன. ஊனமுற்றோருக்கான அமைப்புகளும் கூட பார்வையற்ற பெண்களின் தனித்துவமான பிரச்சனைகளையும் சமவாய்ப்புடன் முன்னேறுவதற்கான சாத்தியங்களையும் போதிய அளவுக்குப் பேசவில்லை என்ற கருத்து உலகளாவிய அளவில் ஊனமுற்ற பெண்ணியச் செயல்பாட்டாளர்களால் தொடர்ந்து வலியுறுத்தப் படுகிறது. இத்தகையதொரு பின்னனியில், கல்வி, பணிவாய்ப்பு, பொருளாதாரத் தற்சார்பு, சமூக மதிப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவம் போன்றவற்றில் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்; குழந்தை வளர்ப்பு, இல்லப் பராமரிப்பு, பண்பாடு மற்றும் மரபுகள் சார்ந்த நம்பிக்கைகள் முதலான தளங்களில் பாலினச் சிக்களோடு பார்வையின்மை தோற்றுவிக்கும் தடைகள் உள்ளிட்ட அம்ஸங்களைப் பேசுபொருளாக்கும் முயற்சியாகவே இந்தக் கருத்தரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற பெண்கள், பெண்ணியச் செயல்பாட்டாளர்கள்,, பார்வையற்ற கலச்செயல்பாட்டாளர்கள், சமூக மாற்றத்திலும்  பாலினச் சமத்துவத்திலும் அக்கறைகொண்டோர் என அனைவரையும் இணைக்க இந்தக் கருத்தரங்கம் சிறிதளவேணும் துணைபுரியும் என நம்புகிறோம்.
பூவிருந்த வள்ளி பார்வையற்றோர் சிறப்புப் பள்ளியின் ஆசிரியரும், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவருமான சித்ரா உபகாரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலானி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வெ. கிறிஷ்ணவேணி, சமூகவியலாளர் வெண்ணிலா ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கருத்தாளர்களாக பங்கேற்று உரையாற்றுகின்றனர். இக்கருத்தரங்க விவாதத்தை சென்னை இந்தியன் வங்கியின் இணை மேலாளரும், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான M. முத்துசெல்வி நெறிப்படுத்தி நடத்துகிறார். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் கு. முருகானந்தன் அறிமுக உரை வழங்க, ப. பூபதி கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார், உ. மகேந்திரன் நன்றியுரை வழங்குகிறார். பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வசதியாகவே இந்த மாலை நேரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறவும் பயனளிக்கவும் அனைவரையும் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்!

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.